ஜல்லிக்கட்டை சட்டப்பூர்வமாக தடுக்காமல், அந்த விவகாரத்தை தமிழக அரசின் பொறுப்பில் மத்திய அரசு விட்டுவிட வேண் டும் என்றார் தமிழர் தேசிய முன் னணித் தலைவர் பழ.நெடுமாறன்.
புதுக்கோட்டையில் செய்தி யாளர்களிடம் நேற்று அவர் கூறி யதாவது: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்ய அனைத்துக் கட்சி கள், தொண்டு நிறுவனங்களை உள்ளடக்கிய குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும்.
10 டிஎம்சி தண்ணீருக்கு அண்டை மாநிலங்களோடு போராடி வரும் நிலையில், சுமார் 380 டிஎம்சி மழைநீர் கடலில் கலப்பதைத் தடுக்க நதிநீரை இணைப்பதே தீர்வாகும். மேலும், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரினால் வறட்சி, வெள்ளப் பாதிப்பை தடுக்க முடியும்.
ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீரவிளையாட்டாக கருதப்படு வதால், அதை சட்டப்பூர்வமாக தடுப்பது தமிழர்களின் பண்பாட்டில் குறுக்கிடுவதாக உள்ளது. எனவே, மத்திய அரசு இந்த விவகாரத்தை தமிழக அரசின் பொறுப்பில் விட்டுவிட வேண்டும் என்றார்.