மேக் இன் இந்தியா என்று கூறும் பிரதமர் மோடி வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களை இந்தியாவுக்குள் அனுமதிப்பது ஏன் என்று திக தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
கல்வித்துறையில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை அனு மதிக்கும் விதமாக உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள ஒப்பந்தத் தில் மத்திய வர்த்தக அமைச்சர் கையொப்பமிட்டுள்ளார்.
கல்வியில் தனியார்மயம், தாராளமயம் என்பது நாட்டின் வளர்ச்சிக்கும், சுதந்திரத்துக்கும் பெரிய கேடாக முடியப் போகிறது.
வெளிநாட்டு பல்கலைக்கழகங் களின் கல்வி நிறுவனங்கள் மத்திய மனித ஆற்றல் துறை, யுஜிசி, ஏஐசிடிஇ, மருத்துவக் கவுன்சில் போன்றவற்றுக்கு கீழ் வருமா என்பது கேள்விக்குறியாகவுள்ளது. மேக் இன் இந்தியா என்று சொல்லும் பிரதமர் நரேந்திர மோடி, வெளிநாட்டு கல்வி நிறு வனங்களை அனுமதிப்பது ஏன் என்று தெரியவில்லை. இதைக் கண்டித்து ஒத்த கருத்துள்ளவர்கள் ஒன்றாக இணைந்து போராட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.