மத்திய அரசு வழங்கியிருக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்களை பார்வையிடுகிறார் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். படம்: எம்.சாம்ராஜ் 
தமிழகம்

புதுச்சேரிக்கு மத்திய அரசு அனுப்பிய 90-டி வகை ஆக்சிஜன் சிலிண்டர்கள் வருகை: சுகாதாரத்துறை செயலர் தகவல்

செய்திப்பிரிவு

90-டி வகை ஆக்சிஜன் சிலிண்டர்களை மத்திய அரசு புதுச்சேரிக்கு அனுப்பியுள்ளது என புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப் பதாவது:

புதுச்சேரி அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகளுக்காக நேற்று 420 ரெம்டெசிவிர் குப்பிகள் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. கரோனா நோய் பாதிப்பு அதிகம் ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தேவையான ரெம்டெசிவிர் குப்பிகள் எவ்வித தட்டுப்பாடும் இல்லாமல், தேவைக்கேற்ப வழங்கப்பட்டு வருகிறது.இவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அதிகரிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு மூலமாக 90-டி வகை ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் 2,500 கரோனா டெஸ்டிங் கிட் புதுச்சேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT