கரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தை தோண்டியெடுத்து திட்டக்குடி வெள்ளாற் றில் புதைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள். 
தமிழகம்

கரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தை சுடுகாட்டிலிருந்து தோண்டியெடுத்து ஆற்றில் புதைப்பு

செய்திப்பிரிவு

திட்டக்குடி சாவடி தெருவைச் சேர்ந்த 65 வயது உடைய ஒருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடலூரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து அவரது சடலம் கரோனா விதிமுறைகளை பின்பற்றி ஆம்புலன்ஸ் வாகனத்தில் திட்டக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சடலத்தை பெற்றுக்கொண்ட உறவினர்கள் அங்குள்ள சுடுகாட்டில் இறுதிச்சடங்கு செய்து புதைத்தனர்.

அந்த சுடுகாட்டின் அருகில் அதிகமான குடியிருப்புகள் உள்ளதால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், கரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தை புதைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திட்டக்குடி காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் அங்கிருந் தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித பலனும் ஏற்படவி ல்லை. இதையடுத்து சடலம் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் திட்டக்குடி வெள்ளாற்றின் நடுப்பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு பொக்லைன் இயந்திரம் மூலமாக குழி தோண்டி புதைக்கப்பட்டது.

இந்த சம்பவம் திட்டக்குடி சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

SCROLL FOR NEXT