தஞ்சாவூரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, ஆபத்தான நிலையிலுள்ள நோயாளிகளை அழைத்து வருவதற்காக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 2 சிற்றுந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் தாமரை பன்னாட் டுப் பள்ளி சார்பில் ஏற்பாடு செய் யப்பட்டுள்ள இந்தச் சிற்றுந்துகள் நேற்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குக் கொண்டுவரப்பட்டன. இந்த பேருந் துகளை ஆட்சியர் ம.கோவிந் தராவ் பார்வையிட்டு, ஆய்வு செய் தார். தஞ்சாவூர் வட்டாரப் போக் குவரத்து அலுவலர் அறிவழகன், மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் உடனிருந்தனர்.
பின்னர், ஆட்சியர் செய்தியா ளர்களிடம் கூறியது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால், நோயாளி களின் எண்ணிக்கையும் அதிகரிக் கிறது. இதைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள்ளப் படுகின்றன. தாமரை பன்னாட்டு பள்ளி சார்பில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய இரண்டு சிற்றுந்துகள் வழங்கப் பட்டுள்ளன. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மருத்து வமனைக்கு அழைத்து வர இந்தச் சிற்றுந்துகள் பயன்படுத்தப்படும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தற் போது 28 அரசு ஆம்புலன்ஸ் கள் மற்றும் 72 தனியார் ஆம்புலன்ஸ் களுடன் இந்த 2 சிற்றுந்துகளும் பயன்படுத்தப்படவுள்ளன என்றார்.
ஒவ்வொரு சிற்றுந்திலும் 4 படுக்கைகள் உள்ளன. ஒவ்வொரு படுக்கைக்கும் ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது. இதைக் கண்காணிக்க ஒவ்வொரு சிற்றுந் துக்கும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.