தமிழகம்

வெளி மாவட்டத்தைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளர்களுக்கு சிறப்பு நிதியுதவி: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னையில் துப்புரவுப் பணியில் ஈடுபட்ட வெளி மாவட்ட தொழிலாளர்களுக்கு சிறப்பு நிதியுதவி வழங்க வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று தனது முகநூல் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

மழை, வெள்ளத்தால் சென்னை யில் குவிந்து கிடந்த குப்பைகளை அகற்ற துப்புரவுத் தொழிலாளர் கள் இரவு, பகலாக பாடுபட்டு வரு கின்றனர். வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான துப்புரவுத் தொழிலாளர்கள் வந்துள்ளனர்.

அவர்களுக்கு தேவையான சுகா தாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தமிழக அரசு செய்து கொடுக்க வேண்டும். சென்னையில் பணி முடிந்துவிட்டால் வெளி மாவட்ட தொழிலாளர்களை பாது காப்பாக அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். சென்னையில் செய்த பணிகளை அங்கீகரிக்கும் வகையில் அவர் களுக்கு சிறப்பு நிதியுதவி வழங்க வேண்டும். கல்வித் தகுதி அடிப்படையில் அவர்களுக்கு பதவி உயர்வும், தற்காலிக பணியாளர்களாக இருந்தால் நிரந்தரம் செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

SCROLL FOR NEXT