“கரோனா தடுப்பு செலவுகளைச் சமாளிக்க அனைவரும் தாராளமாக நிதி வழங்க வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பதற்கு நான்கு நாள் முன்னதாகவே, தனது தொகுதி மக்களிடம் கரோனா நிதி திரட்ட ஆரம்பித்துவிட்டார் கரூர் காங்கிரஸ் எம்பி-யான ஜோதிமணி. ‘கரூர் தொகுதிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனைகளுக்காக 100 ஆக்ஸிஜன் கான்சென்ட்ரேட்டர்கள் வாங்க முடிவு செய்துள்ளோம். உயிர்காக்கும் இந்த உன்னத பணிக்காக எனது ஒரு மாத ஊதியமான ஒரு லட்ச ரூபாயை அளிக்கிறேன். தாங்களும் தங்களால் இயன்ற அளவு தாராளமாக நன்கொடை அளிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன். நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு ரூபாயும் உயிர்காக்க உதவும்; கரோனாவை வெற்றிகொண்டு உயிரிழப்புகளைத் தடுக்க இயலும். தாராளமாக நிதி உதவி செய்வீர்’ என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு நிதிதிரட்டி வருகிறார் ஜோதிமணி.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்