தமிழகம்

ஹாட் லீக்ஸ்: மகள் சப்போர்ட்டில் மாண்புமிகு அண்ணாச்சி!

செய்திப்பிரிவு

கே.கே.எஸ்.எஸ்.ஆர் அண்ணாச்சியை வருவாய்த் துறைக்கு அமைச்சராக்கியதில் அவரது மகளுக்கு பெரும்பங்கு இருக்கிறதாம். சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கும் அண்ணாச்சியின் மகள் சர்வசாதாரணமாய் ஸ்டாலினின் வீட்டுக்குள் சென்றுவரக் கூடியவர். இவரது டாக்டர் கணவர் தான் ஸ்டாலினை வெளிநாட்டு மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் சென்று வந்தவர். அப்போதிருந்தே துர்கா ஸ்டாலினிடம் அண்ணாச்சியின் மகள் நெருக்கமாம். “இம்முறை அண்ணாச்சிக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா?” என்று அவரது அரசியல் எதிரிகள் வில்லங்கக் கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்த நிலையில், எவ்வித சிக்கலும் இல்லாமல் வளமான வருவாய்த் துறைக்கு அமைச்சராகிவிட்டார் அண்ணாச்சி.

மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்

SCROLL FOR NEXT