தமிழகம்

தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

செய்திப்பிரிவு

அடுத்த 24 மணி நேரத்தில் தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தென்மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்ுடி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வடமாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பில்லை. சென்னை, சுற்றுப்புற மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்’’ என்றார்.

SCROLL FOR NEXT