திண்டுக்கல் முஜிப் ஹோட்டல் முன் வைக்கப்பட்டுள்ள உணவுப் பொட்டலங்கள். 
தமிழகம்

ஏழைகளின் பசியாற்றுவதற்காக கடை முன் விலையில்லா உணவு பொட்டலங்கள்

பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல் பேருந்துநிலையம் அருகே முஜிப் பிரியாணி என்ற ஹோட்டலை முஜிபுர்ரகுமான், அவரது சகோதரர் பிலால் ஹூசைன் நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கின்போது இவர்கள் பசியால் வாடியோருக்கு உதவினர். அப்போது மொத்தம் 25 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்களை வழங்கினர். இந்த ஆண்டும் ஊரடங்கால் ஏழை எளியோர் பாதிக்கப் பட்டுள்ளனர். தற்போது முஜிப் பிரியாணி ஹோட்டல் முன் ஒரு டேபிளில் உணவுப் பொட்டலங்களை வைத்து ‘விலையில்லா உணவு’, பசித்தோர் பசியாறலாம் என்ற அறிவிப்பை எழுதி வைத்துள்ளனர்.

வருமானத்துக்கு வழியின்றி உள்ளோர் உணவுப் பொட்டல ங்களை எடுத்துச் செல்கின்றனர். இவர்களின் சேவை பலரின் பசியை ஆற்றி வருகிறது.

SCROLL FOR NEXT