திருச்சி கருமண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் களப் பணியாளர்களிடம் கரோனா தடுப்பு மருந்து தொகுப்பை அளிக்கும் அமைச்சர்கள் கேஎன்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி. உடன், ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி, எம்எல்ஏ எஸ்.இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோர். 
தமிழகம்

திருச்சி பெல் நிறுவனத்தில் ஒரு மாதத்துக்குள் ஆக்சிஜன் உற்பத்திக்கு நடவடிக்கை: நிறுவன அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தகவல்

செய்திப்பிரிவு

ஒரு மாதத்துக்குள் ஆக்சிஜன் உற்பத்தி செய்து தர நடவடிக்கை எடுப்பதாக திருச்சி பெல் அதிகாரி கள் உறுதி அளித்துள்ளனர் என மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச் சர் கேஎன்.நேரு தெரிவித்தார்.

திருச்சி மாநகராட்சி சுகாதாரத் துறை சார்பில் கரோனா பரவல் தடுப்பு கள ஆய்வு பணி மற்றும் தடுப்பு மருந்து தொகுப்பு வழங்கும் பணி ஆகியவற்றின் தொடக்க விழா 45-வது வார்டு கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோயில் அருகே நேற்று நடைபெற்றது.

ஆட்சியர் எஸ் திவ்யதர்ஷினி தலைமை வகித்தார். திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.இனிகோ இருத யராஜ் முன்னிலை வகித்தார்.

மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இந்தப் பணிகளைத் தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேசியது: திருச்சி மாவட்டத்தில் மருத்துவமனைகள் மற்றும் கரோனா பாதுகாப்பு சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில் கரோனா தொற்றாளர்களுக்கு தேவையான அளவுக்கு படுக்கை வசதிகள் உள்ளன. ஆனால், ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது. இதுகுறித்து முதல்வரின் கவனத் துக்கு கொண்டு சென்றுள்ளோம். திருச்சி மாவட்டத்துக்கு தேவை யான ஆக்சிஜனை கொண்டு வந்து, மக்களைக் காப்பாற்றும் பணியை ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன் பெல் நிறுவனத்துக்குச் சென்று ஆக்சிஜன் உற்பத்தி செய்து தர வேண்டும் என்று கோரினோம். அதற்கு, நாங்களே வெளியில் இருந்துதான் வாங்கிப் பயன்படுத்தி வருகிறோம். எனவே, ஆக்சிஜன் உற்பத்தியைத் தொடங்க வாய்ப்பு இல்லை என்றனர்.

ஆனால், நாட்டில் நிலவும் இக் கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மக்களைக் காப்பாற்ற ஆக்சிஜன் உற்பத்தி செய்து தர வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம். இதையேற்று, ஒரு மாதத்துக்குள் ஆக்சிஜன் உற்பத்தி செய்து தர நடவடிக்கை எடுப்பதாக பெல் அதிகாரிகள் உறுதியளித்தனர்.

கரோனா தொற்றால் பாதிக் கப்பட்டு, ஆக்சிஜன் தேவையு டன் மருத்துவமனைக்கு வருவோ ருக்கு ஆக்சிஜன் படுக்கை கிடைக்காத நிலையில், அதுவரை அவர்களைப் பாது காக்க பயன்படும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகருக்கு 30 அல்லது 40 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மட்டுமே வழங்கப்படவுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணை யரைத் தொடர்பு கொண்டு திருச்சிக்கு 1,000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்குமாறு வலியுறுத்தியுள்ளேன் என்றார்.

ஆட்சியர் பேசியது: திருச்சி மாநகராட்சியில் மொத்தமுள்ள 65 வார்டுகளில் 100-க்கும் அதிகமாக கரோனா தொற்றாளர்கள் உள்ள 35 வார்டுகளில், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் வீடுதோறும் கள ஆய்வில் ஈடுபட உள்ளனர்.

கரோனா தொற்று அறிகுறி உடையவர்கள் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு காத்திருக்காமல், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம். வீட்டில் தனிமைப் படுத்தப்படுபவர்களை களப் பணி யாளர்கள் தொடர்ந்து கண்காணிப் பார்கள். அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண் அளிக்கப்பட்டு, மருத்துவ ஆலோசனைகளும், தேவைப்பட்டால் மருத்துவ உதவி களும் செய்யப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் ரங்கம் சார் ஆட்சியர் விசு மகாஜன், மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ராம் கணேஷ், பயிற்சி ஆட்சியர் பவித்ரா, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ்.காமராஜ், நகர் நல அலுவலர் எம்.யாழினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT