தமிழகம்

மழைக்கு பலியான 15 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டத்தில் மழைக்கு பலியான 15 பேரின் குடும்பத்தினருக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 4 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கடந்த 2-ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் கோட்டீஸ்வரன், பட்டாபிராம் ஜெயந்தி, பூங்கொடி, சந்தியா, அத்திப்பட்டு புதுநகர் ஜெகநாதன், 3-ம் தேதி வேம்பேடு மனோகரன், 4-ம் தேதி விடையூர் பழனி, இருளஞ்சேரி அன்புச்செல்வன், தண்டுரை பட்டாபிராம் யுவராஜ், மணிவண்ணன், மணலிபுதுநகர் தினகரன், 5-ம் தேதி காட்டூர் சுந்தரமூர்த்தி ஆகியோர் மழை, வெள்ளத்தால் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

கடந்த 3-ம் தேதி வேப்பம்பட்டு காசி, 6-ம் தேதி மோவூர் மகாலிங்கம், பிரியாங்குப்பம் மணி ஆகியோர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததாலும் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகவும் துயரம் அடைந்தேன். உயிரிழந்த 15 பேரின் குடும்பத்தினருக்கும் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 4 லட்சம் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்'' என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT