முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ரவிச்சந்திரன், சிறையில் தான் பார்த்த வேலைக்காக கிடைத்த சம்பளத்திலிருந்து கரோனா நிவாரண நிதிக்கு ரூ.5 ஆயிரம் வழங்கியுள்ளார்.
அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 28 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இவர் சிறையில் தான் செய்த வேலைக்காக வழங்கப்பட்ட ஊதியத்தில் ரூ.5 ஆயிரத்தை தமிழக முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
ரவிச்சந்திரன் சிறையில் தான் செய்த வேலைக்காக பெற்ற ஊதியத்தில், ஹார்வர்டு தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய ரூ.20 ஆயிரம், கஜா புயல் நிவாரணத்துக்கு ரூ.5 ஆயிரம் வழங்கியுள்ளார்.
தற்போது கரோனா நிவாரண நிதியும் வழங்கியுள்ளார் என அவரது வழக்கறிஞர் திருமுருகன் தெரிவித்தார்.