விக்கிரவாண்டி எம்எல்ஏபுகழேந்தி தன் தொகுதிக்குஉட்பட்ட கெடார், காணை அரசுஆரம்ப சுகாதார நிலையங்களில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். காணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ, அங்கிருந்த செவிலியரிடம் பல்ஸ் ஆக்சிமீட்டர் மூலம்தன் ஆக்சிஜன் அளவை பரிசோதிக்க விரும்புவதாக தெரிவித்தார். செவிலியரும் மருத்துவமனையில் இருந்த பல்ஸ் ஆக்சிமீட்டரை அவரின் விரலில் செருகினார். ஆனால் அந்த மீட்டர் செயல்படவில்லை. பின்னர் தன் காரில் இருந்த வேறு பல்ஸ் ஆக்சி மீட்டர் மூலம் தன் ஆக்சிஜன் அளவை பரிசோதித்துக் கொண்டார். மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட அந்த மீட்டருக்கு பேட்டரி வழங்கப்பட வில்லை என்று மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.