தமிழகம்

நடிகர் சிம்பு, அனிருத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கோவையில் மாதர் சங்கத்தினர் போலீஸில் புகார்

செய்திப்பிரிவு

பெண்களை ஆபாசமாக சித்த ரித்து பாடல் தயாரித்து, இணைய தளத்தில் வெளியிட்டதாக நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டுமென அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள் ளனர்.

இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து நடிகர் சிம்புவுடன் இணைந்து பாடியதாக ‘பீப்’ என்ற பெயரில் பாடல் ஒன்று கடந்த 10-ம் தேதி இணையதளத்தில் வெளி யிடப்பட்டுள்ளது. ஆபாசமான வார்த்தையை மறைக்க ‘பீப்’ என்ற ஒலி பயன்படுத்தப்பட்டு, அதுவே இந்தப் பாடலின் தேடல் தலைப்பாகவும் மாறியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. வேகமாகப் பரவி வரும் இப்பாடலில் பெண் களைக் கொச்சைப்படுத்தும் நோக் கில் ஆபாசமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பல தரப்பிலும் கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், பெண்களை ஆபாசமாக சித்தரித்து, கேவலமாக விமர்சிக்கும் இப்பாடலைத் தடை செய்ய வேண்டும். பாடலை இயற்றியதாகக் கூறப்படும் நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகிய 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கோவையில் மாதர் சங்கத்தைச் சேர்ந்த பெண்கள், மாநகர காவல் ஆணையர் அமல்ராஜை நேற்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். காவல் ஆணையர் அலுவலகம் முன்பு சிம்பு, அனிருத் ஆகியோரது புகைப்படங்களைக் கிழித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட் டச் செயலாளர் ராதிகா கூறும் போது, ‘பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இது போன்ற பாடல்கள் வெளிவருவது பெண்கள் மீதான பார்வையை மேலும் மோசமாக்கும். இது கண்டிக்கத்தக்கது. லட்சக்கணக் கானவர்களுக்கு பரவி வருவதால், உடனடியாக அந்தப் பாடலை தடை செய்து, சம்பந்தப்பட்ட நடிகர், இசையமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

SCROLL FOR NEXT