தமிழகம்

பிளஸ்-2, எஸ்எஸ்எல்சி அரையாண்டு தேர்வுகள் ஜன.11-ம் தேதி தொடங்குகிறது: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

செய்திப்பிரிவு

தொடர் மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட பிளஸ்2, எஸ்எஸ்எல்சி அரையாண்டுத்தேர் வுகள் ஜனவரி 11-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தொடர் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புகளுக்கான அரை யாண்டு பொதுத்தேர்வுகள் ஜனவரி 11-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதேபோன்று 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்புகளுக்கு டிசம்பர் மாதம் நடைபெற இருந்த அரையாண்டுத்தேர்வுகளும் ஜனவரி 11-ம் தேதி முதல் நடை பெறும். அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் இதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள் ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தனியார் பள்ளிக்கு எச்சரிக்கை

நேற்று கோவை வந்த பள்ளிக் கல்வி துறை இயக்குநர் கண்ணப்பன் செய்தியாளர் களிடம் கூறும்போது, தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வுகள் ஜனவரி 11-ம் தேதி முதல் தொடங்கும். தனியார் பள்ளிகள் அரையாண்டு தேர்வை டிசம்பர் மாதத்தில் எக்காரணம் கொண்டும் நடத்தக்கூடாது என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அரசின் அறிவிப்பை மீறி டிசம்பரில் தேர்வுகளை நடத்தும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

SCROLL FOR NEXT