கோயில்களில் ஆடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதற்கு ஆதரவாக பார்த்தசாரதி கோயில் ஊழியர்கள் நேற்று வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து பணிக்கு சென்றனர்.
கோயில்களுக்கு ஜீன்ஸ், டி-சர்ட், போன்ற ஆடைகளை அணிந்து வர ஜனவரி 1 முதல் தடை விதிக் கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை வரவேற்கும் விதமாக பாரம்பரிய ஆடைகளை அணிந்து கோயிலுக்கு செல்ல தமிழ்நாடு திருக்கோயில் பணியாளர்கள் கூட்டமைப்பினர் முடிவு செய்திருந்தனர். அதன்படி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் ஊழியர்கள் வேட்டி சட்டைகளை அணிந்து பணிக்கு சென்றனர். தமிழ்நாடு திருக்கோயில் பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் வை.ஈஸ்வரன் தலைமையில் 50-க்கும் அதிகமான பணியாளர்கள் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்து கோயிலுக்கு சென்றனர்.