தமிழகம்

இனாம்குளத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வுக்கு பின் 5 மணிநேரத்தில் சீரமைக்கப்பட்ட கட்டிடம்

செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டம் இனாம்குளத் தூரில் பராமரிப்பு இல்லாத கட்டிடம், எம்எல்ஏ பழனியாண்டி ஆய்வுக்குப் பின்னர் 5 மணி நேரத்தில் சீரமைக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை ரங்கம் தொகுதி எம்எல்ஏ எம்.பழனியாண்டி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அந்த வளாகத்தில் ஒரு கட்டிடம் பராமரிப்பு இல்லாமல் செடி, கொடிகள் முளைத்து கிடப்பதைப் பார்த்த அவர், அந்தக் கட்டிடத்தை ஆய்வு செய்து, அதை மீண்டும் பயன்பாட்டுக் கொண்டு வர ஆலோசனைகளை வழங்கி பணிகளை துரிதபடுத்தினார்.

இதைத் தொடர்ந்து 5 மணி நேரத்தில் அந்த கட்டிடம் தூய்மைப்படுத்தப்பட்டு, வண்ணம் பூசப்பட்டு, சீரமைக்கப்பட்டது. இந்த கட்டிடம் இன்று (மே 14) முதல் மக்கள் பயன்பாட்டுக்கு மீண்டும் கொண்டு வரப்பட உள்ளது. எம்எல்ஏவின் இந்த துரித நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

கரோனா சிகிச்சை மையம்

முன்னதாக கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்படும் ரங்கம் அரசு மருத்துவமனை, ரங்கம் யாத்ரிகர் நிவாஸ் ஆகிய இடங்களில் எம்எல்ஏ எம்.பழனி யாண்டி ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ரங்கம் அரசு மருத்துவ மனையில் கூடுத லாக ஆக்சிஜன் சிலிண்டர் கள் தேவைப்படுவதாக தெரிவித்ததால், மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. பேட்டைவாய்த்தலையில் விரைவில் கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்படவுள்ளது என்றார்.

SCROLL FOR NEXT