தமிழகம்

ஹாட் லீக்ஸ்: என்ன பன்னீர் இப்டி ஆகிருச்சு..?

செய்திப்பிரிவு

குறிஞ்சிப்பாடி தொகுதியில் இந்த முறையும் எளிதாக ஜெயித்துவிடலாம் என நினைத்தார் திமுக முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம். ஆனால், அதிமுக வேட்பாளரான செல்வி ராமஜெயம் கடைசிக்கட்டத்தில் வாக்காளர்களின் காலில் விழுந்து வாக்குக் கேட்டு பெரும் அனுதாபத்தைத் தக்கவைத்தார்.

இதனால் வன்னியர் பகுதிகளில் அவருக்கு கணிசமாக செல்வாக்குக் கூடியது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் செல்வி ராமஜெயம் முன்னிலை என்ற செய்திகள் வந்ததுமே பன்னீர்செல்வத்தைத் தொடர்பு கொண்ட ஸ்டாலின், “என்ன பன்னீர் இப்டி ஆகிருச்சு...” என்று கவலையோடு விசாரித்தாராம். பதற்றமான பன்னீர், “இப்ப எண்றதெல்லாம் வன்னியர் பெல்ட். இருபது பூத்கள் இப்படித்தான் இருக்கும்.

அதுக்கப்புறம் தான் நமக்கு சாதகமா இருக்கும்; பயப்படாதீங்க” என்றாராம். சொன்னபடியே அடுத்தடுத்த ரவுண்டுகளில் முன்னேறிய பன்னீர், சுமார் 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடினார்.

மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்

SCROLL FOR NEXT