தென் மாவட்டங்களில் கரோனா வேகமாகப் பரவுகிறது. ஆக்சி ஜனுடன் கூடிய படுக்கை வசதி கிடைக்காததால் உயிரிழப்பு அதி கரித்து வருகிறது. மதுரையில் நேற்று முன்தினம் 1,024 பேருக்கு புதிதாக தொற்று பாதித்தது. ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்தனர்.
தென் மாவட்டங்களில் மதுரை, நெல்லை அரசு மருத்துவமனை களில் மட்டுமே ஆக்சிஜன் படுக் கை வசதிகள் உள்ளன. மற்ற அரசு மருத்துவமனைகள், மாவட்ட அரசு மருத்துவமனைக்குரிய தரத்திலேயே செயல்படுகின்றன.
போதிய ஆக்சிஜன் படுக்கை வசதிகள் இல்லாததால் பக்கத்து மாவட்டங்களில் தீவிர பாதிப்புக் குள்ளான கரோனா நோயாளிகள் நெல்லை அல்லது மதுரை அரசு மருத்துவமனைக்குப் பரிந்துரைக் கப்படுகின்றனர்.
மதுரையில் 400-க்கும் மேற்பட்ட வெளிமாவட்ட நோயாளிகள் சிகிச் சையில் உள்ளனர். தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பதால் போதிய ஆக்சிஜன் படுக்கை கிடைப்ப தில்லை.
அரசு ராஜாஜி மருத்துவமனை நுழைவு வாயிலில் ஆம்புலன்ஸ்கள், ஆட்டோ, கார்களில் ஆக்சிஜன் படுக்கைக்காக நோயாளிகள் காத்திருக்கின்றனர். படுக்கை கிடைக்காமல் நோயாளிகள் மூச்சுத் திணறி இறக்கும் பரிதாபம் அதி களவு நிகழ்கிறது.
சென்னையில் பாதிப்பும், உயிரி ழப்பும் அதிகமானதையடுத்து சுகாதாரத்துறை கூடுதலாக மருத் துவர், செவிலியர்களை நியமனம் செய்ததோடு கூடுதல் ஆக்சிஜன் படுக்கைகளையும் அதிகரித்தது.
ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்த 1,212 செவிலியர்கள் பணி நிரந்தரமாக்கப்பட்டு அனை வரையும் சென்னையில் பணியில் சேர உத்தரவிடப்பட்டது.
மதுரையில் ஏற்கெனவே போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இன்றி மருத்துவ மாணவர்களைக் கொண்டே கரோனா சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மதுரை அரசு ராஜாஜி, ரயில்வே உள்ளிட்ட மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்காக 1,887 படுக்கைகள் உள்ளன.
இதுதவிர, தற்காலிக மையங் களில் அறிகுறியில்லாத நோயா ளிகளுக்காக 1,740 படுக்கைகள் உள்ளன. தனியார் மருத்துவ மனைகளில் 1,558 படுக்கைகள் உள்ளன.
ஆனால், தொற்று பாதித்த நோயாளிகளில் 50% பேருக்கு மூச்சுத் திணறலால் ஆக்சிஜன் தேவைப்படுவதால் அனைவரும் ஆம்புலன்ஸ்களில் ஆக்சிஜன் படுக்கைக்காக காத்திருக்கும் அவ லம் ஏற்பட்டுள்ளது.
மதுரைக்கு நாளொன்றுக்கு 500 ரெம்டெசிவிர் வழங்கப்படுகிறது. 6 குப்பிகள் வீதம் 80 நோயாளி களுக்கு மட்டுமே போதுமானது. ஆனால், தினமும் 250-க்கும் மேற் பட்டோர் வரிசையில் நிற்கின்றனர்.
1,400-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வீடுகளில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர். பணம் இருந்தாலும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியவில்லை. அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் ஒதுக்குவதில் வரிசை கடைபிடிக்கப்படுவதால் சிகிச்சை தடையின்றி கிடைப்பது கேள்வி குறியாகியுள்ளது.
சுகாதாரத் துறையின் தலைமை அதிகாரிகள் சென்னையிலே இருப் பதால் தலைநகரில் நிலவும் பிரச்சினைகள் உடனுக்குடன் அவர் களின் கவனத்துக்குச் செல்கின்றன. இதனால், கூடுதலாக மருத்துவர், செவிலியர்கள் நியமனத்துக்கும், ஆக்சிஜன் படுக்கைகளை அதிக ப்படுத்தவும் முக்கியத்துவம் அளிக்கிறது.
மதுரையில் நோயாளிகள் படும் சிரமத்தையும், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் சுகாதார அமைச்சர், அதன் செயலரின் கவனத்துக்கு மட்டுமே மாவட்ட ஆட்சியர் கொண்டு செல்ல முடிகிறது. இதனால், முடி வெடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
இதே நிலை நீடித்தால் நோயா ளிகள் உயிரிழப்பு அதிகமாகும்.
அதனால், மதுரைக்கு கூடுதல் ஆக்சிஜன், படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டும்.
அரசு, தனியார் மருத்துவ மனைகளில் உள்ள ஆக்சிஜன் படுக்கை வசதி விவரத்தை மக்களுக்குத் தெரியும் வகை யில் வெளியிட்டு படுக்கை வசதியிருக்கும் இடங்களுக்கு நோயாளிகள் செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னையைப் போல் மதுரைக் கும் கரோனா சிகிச்சைக்கான மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முக்கியத்துவம் கொடுத்து நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.