ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் மதுபான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத மதுபான விற்பனை குறித்து தூத்துக்குடிமாவட்டம் முழுவதும் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி தென்பாகம்உதவி ஆய்வாளர் வேல்ராஜ் தலைமையிலான போலீஸார் அண்ணா நகர் பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த கிருஷ்ணன் என்ற கண்ணன் (23) என்பவரை கைது செய்து, 1,872 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கோவில்பட்டியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த 5 பேரைக் கைது செய்து, 885 மதுபாட்டில்களை கோவில்பட்டி கிழக்கு உதவி ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீஸார் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி வடபாகம், தெர்மல்நகர், வைகுண்டம், கோவில்பட்டி மேற்கு, எட்டயபுரம், தட்டார்மடம், தூத்துக்குடி மதுவிலக்கு பிரிவுமற்றும் கோவில்பட்டி மதுவிலக்கு பிரிவு காவல்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 11 பேர் கைது செய்யப்பட்டு, 150 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தூத்துக்குடி மதுவிலக்கு பிரிவு காவல் நிலையஉதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன், சிறப்புஉதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீஸார் நேற்று திருச்செந்தூர்அருகேயுள்ள வீரபாண்டியன்பட்டினம், வேளாங்கண்ணி கோயில் தெருவில் உள்ள வீட்டில்சோதனை நடத்தினர். அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது தெரியவந்தது.
அந்த பகுதியைச் சேர்ந்த விநாயகமூர்த்தி (45) என்பவரை கைது செய்து, 35 லிட்டர் கள்ளச்சாராயம், 60 லிட்டர் ஊரல், பாத்திரங்கள், அடுப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.