தமிழகம்

ஜெ. வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளிவைப்பு

செய்திப்பிரிவு

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதிக்கு கடந்த ஜூன் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உட்பட 28 பேர் போட்டியிட்டனர். இதில், முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியை எதிர்த்து இத்தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்ட சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

“ஜெயலலிதா ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், அவருக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்பட்டனர். எனவே, ஜெயலலிதா வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும்” என்று டிராபிக் ராமசாமி தனது மனுவில் கூறியிருந்தார்.

அதுபோல சேலம் மாவட்டம், முள்ளவாடி கிராமத்தைச் சேர்ந்த டி.சுரேஷும் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகள் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, இடைத்தேர்தலில் போட் டியிட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டி ருந்தது. ஆனால், பலருக்கும் அந்த நோட்டீஸ் போய்ச் சேரவில்லை என்று மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்களின் வழக்கறிஞர்கள் முறையிட்டனர். இதையடுத்து, வழக்கு விசாரணையை ஜனவரி 22-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT