தமிழகம்

ஆக்சிஜன் உற்பத்தி மையங்களுக்கு தடையற்ற மின்சாரம்

செய்திப்பிரிவு

தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக பிரிவு இயக்குநர் தலைமையில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், இயக்குநர் கூறியதாவது:

கரோனா ஊரடங்கின்போது தடையற்ற மின்விநியோகம் செய்ய வேண்டும். அதேபோல்,ஆக்சிஜன் உற்பத்தி மையங்களுக்கும் தடையற்ற மின்சாரம் விநியோகிக்க வேண்டும். மேலும்,ஆக்சிஜன் உற்பத்தி மையங்களைக் கண்காணிக்க பொறுப்புஅதிகாரி ஒருவரை பணியில் ஈடுபடுத்த வேண்டும். அரைமணிநேரத்துக்கு மேல் மின்தடை ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட இடத்துக்கு உதவி செயற்பொறியாளர் நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT