தமிழகம்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கரோனா நிவாரணம் ஞாயிறன்றும் வழங்கப்படும்: உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவிப்பு

செய்திப்பிரிவு

ரேஷன் கடைகளில் மே 16 ஞாயிற்றுக்கிழமையும் கரோனா நிவாரணம் வழங்கப்படும் என்று உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

கரோனா பரவலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 2.07 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணை கரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்றுமுன்தினம் தொடங்கி வைத்தார்.

ரேஷன் ஊழியர்கள், 12-ம் தேதிவரை வீடு வீடாக டோக்கன் வழங்க உள்ளனர். டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள், நேரத்தில் ரேஷன் கடைக்கு சென்று ரூ.2 ஆயிரம் கரோனா நிவாரணத்தைப் பெறலாம். இதற்காக ரூ.4,153 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மே 15 முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், 16-ம் தேதியான ஞாயிற்றுக்கிழமையும் ரேஷன் கடைகள் இயங்கும் என்றும், அன்றும் நிவாரணம் வழங்கப்படும் என்றும் உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் சஜ்ஜன் சிங் சவான் தெரிவித்துள்ளார். அன்றைய பணி நாளுக்கு ஈடான விடுமுறை நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

SCROLL FOR NEXT