தமிழகம்

மக்களால் தேர்வானவர்களை மத்திய அரசு அவமதிக்கிறது; மாநில அரசு பரிந்துரைப்பவர்களையே நியமன எம்எல்ஏக்களாக நியமிக்க வேண்டும்: புதுவை திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

மாநில அரசு பரிந்துரைப்பவர் களையே நியமன எம்எல்ஏக்களாக நியமிக்க வேண்டுமென புதுச்சேரி திமுக சட்டப்பேரவை கட்சி தலைவர் சிவா எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

புதுச்சேரியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டப்பேரவையும், அரசும் இருந்தாலும் மத்தியில் ஆட்சிக்கு வந்தது முதல் பாஜக தொடர்ந்து ஜனநாயக விரோதநடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது. மக்களால் தேர்வுசெய்யப்பட் டவர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொள்வதற்கு முன்பாகவே நியமன எம்எல்ஏக்களை நியமித்து. மக்களால் தேர்வு செய்யப் பட்டவர்களை அவமதித்துள்ளது.

நியமன எம்எல்ஏக்கள் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் சரியான வாதங்கள் முன் வைக்கப்படவில்லை. அதாவது நியமன எம்எல்ஏக்களுக்கு ஓட்டுரிமை அளித்தால், அவர்களைக் கொண்டு மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை கலைத்துவிட முடியும் அல்லது மக்களால் தேர்வு செய்யப்படாத அரசு ஆட்சி அமைக்க முடியும் போன்றவைகள் விவாதத்தில் முன்வைக்கப்படவில்லை.

இதனால் உச்சநீதிமன்றமும் இந்த வழக்கில் சரியான தீர்ப்பை வழங்கவில்லை. இதனால் நியமன எம்எல்ஏக்கள் நியமனம் தொடர்பாக தற்போது மத்திய அரசால் மேற்கொண்டுள்ள நடைமுறை ஜனநாயகம் அழிய வழிவகிக்கும். எனவே தற்போதுள்ள நியமன எம்எல்ஏக்கள் முறையை கைவிட்டு. புதுச்சேரியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு பரிந்துரைக்கும் நபர்களையே நியமன எம்எல்ஏக்களாக நியமிக்கும் முறையை கொண்டுவர வேண்டும்.

புதுச்சேரி மக்களால் தேர்வு செய்யப்படாதவர்களும், தேர்வு செய்ய தகுதியில்லாதவர் களும் அரசு நிர்வாகத்தை கையில் எடுத்துக் கொண்டால் இந்த நிலைதான் ஏற்படும். முதல்வர் ரங்கசாமி முதியோர், விதவை, கணவனால் கைவிடப்பட்டோர் ஆகியோரின் நிலையை கருத்தில் கொண்டு மாதாந்திர உதவித்தொகையில் ரூ.500 உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இத்தொகை உடனே கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

SCROLL FOR NEXT