விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவில் நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர். 
தமிழகம்

சிகிச்சைப் பிரிவுக்குள் சென்றுவரும் உறவினர்கள்: விருதுநகர் மாவட்டத்தில் 361 பேருக்கு கரோனா

இ.மணிகண்டன்

விருதுநகர் அரசு மருத்துவமனை கரோனா சிறப்பு வார்டில் நோயாளிகளின் உறவினர்களும் அனுமதிக்கப்படுவதால் நோய் தொற்று மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 90-க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

கரோனா சிகிச்சைப் பிரிவுக்குள் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் கவச உடை அணிந்து சென்றே சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால், நோயாளிகளின் உறவினர்கள் பலர் எவ்வித பாதுகாப்பும் இன்றி உணவு, பழங்கள், உடைகளை வழங்க சர்வ சாதாரணமாக சென்று வருகின்றனர். இதனால் நோய்த்தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், கரோனா சிகிச்சைப் பிரிவில் மற்றவர்கள் செல்ல அனுமதி இல்லை. அவர்களைத் தடுத்தால் வாக்குவாதத்தில் ஈடு படுகின்றனர் எனக் கூறினர்.

மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் சுகாதார அதிகாரி உட்பட 361 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.

SCROLL FOR NEXT