தமிழகம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள்: ஹுண்டாய் நிறுவனம் வழங்கியது

செய்திப்பிரிவு

சென்னை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட மக்களுக்கு ஹுண்டாய் நிறுவனம் சார்பில் உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப் பட்டன.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் சார்பில் பெரு நிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 4-ம் தேதி சப்பாத்தி, குழம்பு, அரிசி சாதம், 2 வாழைப் பழங்கள் அடங்கிய 5 ஆயிரம் பாக்கெட்டுகளும், 5-ம் தேதி 6 ஆயிரம் பாக்கெட்டுகளும் தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப் படையிடம் வழங்கப்பட்டது. அதை அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வான் வழியாக வழங்கினர்.

நேற்று முன்தினம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா வெங்காடு, நெமிலி ஆகிய கிராமங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆடைகள், போர்வை, குடிநீர் கேன்கள் உள்ளிட்ட நிவா ரணப் பொருட்களை ஹுண்டாய் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் யங் கீ கூ வழங்கினார். அப்போது ஹுண்டாய் நிறுவனத்தின் ஒருங் கிணைந்த தொழிற்சங்கத் தலைவர் ஜி.விநாயகம் உடனிருந்தார்.

மேலும் பேரீஞ்சம்பாக்கம், ஒட்டன்கரணை, தத்தனூர் ஆகிய கிராமங்களிலும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. மொத்தம் 1000 குடும்பங்கள் பயனடைந்துள்ளன. நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணி டிசம்பர் 14-ம் தேதி வரை நடைபெறும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

          
SCROLL FOR NEXT