தமிழகம்

தமிழகத்துக்கு ரூ.50 ஆயிரம் கோடி மத்திய அரசு வழங்க வேண்டும்: மக்கள் நலக் கூட்டணி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு ரூ.50 ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும் என்று மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், திரு மாவளவன், முத்தரசன் ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்ட அறிக் கையில் கூறியிருப்பதாவது:

மழை வெள்ளத்தால் தமிழகத் தில் பெரும் பாதிப்புகள் ஏற்பட் டுள்ளன. அரசு சார்பில் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. செம்பரம்பாக்கம் ஏரியை படிப்படியாக திறந்துவிடாததால் சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதற்கு பொதுப்பணித் துறை அதிகாரிகள்தான் பொறுப்பு என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் விளக்கம் கூறுகிறார்.

தமிழகத்தின் வெள்ளச் சேதம் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப் படுகிறது. எனவே, தமிழகத்துக்கு மத்திய அரசு குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும். இவ்வாறு அறிக் கையில் கூறியுள்ளனர்.

SCROLL FOR NEXT