தமிழகம்

ஆண்டிபட்டி அருகே அரசு பஸ் - ஆட்டோ மோதி 5 பேர் பலி

செய்திப்பிரிவு

ஆண்டிபட்டி அருகே ஆட்டோ மீது அரசு பஸ் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.

தேனியில் இருந்து மதுரை நோக்கி அரசு பஸ் நேற்று இரவு 7 மணியளவில் சென்று கொண்டிருந்தது. ஆண்டிபட்டி சுப்புலாபுரம் விலக்கு அருகே சென்றபோது எதிரே வந்த ஆட்டோ மீது அரசு பஸ் நேருக்கு நேர் மோதியதாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் பஸ்ஸுக்குள் சிக்கிய ஆட்டோ முற்றிலும் உருக்குலைந்தது. ஆட்டோவில் பயணம் செய்த 3 பெண்கள், ஆட்டோ ஓட்டுநர் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயி னர். இறந்தவர்கள் விவரம் உடனடியாகத் தெரியவில்லை.

தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ. மகேஷ் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். சம்பவத்தின்போது, அப்பகுதியில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது.

இக்கோர விபத்து குறித்து ஆண்டிப்பட்டி போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT