தமிழகம்

விஏஓ தேர்வுக்கு விண்ணப்பிக்க டிச.31 வரை அவகாசம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

செய்திப்பிரிவு

விஏஓ தேர்வுக்கு விண்ணப்பிக்க டிச.31 வரை அவகாசம் நீட்டிக்க்ப்பட்டுள்ளது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''கிராம நிர்வாக அதிகாரி (விஏஓ) தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 12 என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

பெருமழை மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட அசாதாரண சூழல் காரணமாக தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 31-ந் தேதி வரையும், விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள் ஜனவரி 2-ம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT