கரூர் மாவட்டம் மணவாசி சமத்துவபுரம் அருகே டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் விற்பனை முடிந்து கடை மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் கடையை பூட்டிவிட்டுச் சென்றார். பின்னர் நேற்று வந்து கடையை திறந்து பார்த்தபோது, கடையின் பின்பக்க சுவரில் துளையிடப்பட்டிருந்தது. மேலும், கடையில் ரூ.18 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் இருந்த நிலையில் ரூ.40,500 மதிப்புள்ள 129 மதுபான பாட்டில்கள் மட்டும் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. கடையில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவும் சேதப்படுத்தப்பட்டிருந்தது. இதுகுறித்து மாயனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.