கோதை அண்ணாமலை 
தமிழகம்

‘குமுதம்’ கோதை அண்ணாமலை சென்னையில் காலமானார்

செய்திப்பிரிவு

குமுதம் நிறுவனர் மற்றும் ஆசிரியர் எஸ்.ஏ.பி.அண்ணாமலையின் மனைவியும், குமுதம் இயக்குநர்களில் ஒருவருமான கோதை அண்ணாமலை (92) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.

1947-ம் ஆண்டு தனது கணவர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை ஆசிரியராக இருந்து நிறுவிய குமுதம் இதழின் வளர்ச்சிக்கு, ஆரம்ப காலத்தில் இருந்து இறுதிவரை கோதை அண்ணாமலை உறுதுணையாக இருந்தார். எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்ட இவருக்கு, மகன் டாக்டர் எஸ்.ஏ.பி. ஜவஹர் பழனியப்பன், மகள்கள் விஜயலட்சுமி அழகப்பன், கிருஷ்ணா சிதம்பரம் ஆகியோர் உள்ளனர்.

எஸ்.ஏ.பி. ஜவஹர் பழனியப்பன், அமெரிக்காவில் இதய நோய் சிகிச்சை மருத்துவராகப் பணியாற்றுகிறார். கிருஷ்ணா சிதம்பரம் எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளராக உள்ளார்.

SCROLL FOR NEXT