தமிழகம்

தமிழகத்தில் பரவலாக இன்று மழை பெய்யும்

செய்திப்பிரிவு

வெப்பச்சலனம் காரணமாக மே 10-ம் தேதி (இன்று) மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை (மே 11) தென் கடலோர மாவட்டங்கள், வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 12, 13-ம் தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும்.

11, 12, 13-ம் தேதிகளில் மேற்கு, வடமேற்கு திசையில் இருந்து தமிழகம் நோக்கி தரைக்காற்று வீச வாய்ப்பு உள்ளதால், தமிழக கடலோரம் மற்றும் அதையொட்டிய உள் மாவட்டங்களில் 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் உயரக்கூடும்.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இத்தகவலை சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT