பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஆவின் பால் தடையின்றி கிடைக்க பால் விற்பனை அலுவலர்கள் நியமனம்

செய்திப்பிரிவு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஆவின் பால் மற்றும் பால் உப பொருட்கள் தடையின்றி கிடைக்க பால் விற்பனை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து, வேலூர் ஆவின் நிர்வாகம் இன்று (மே 09) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

"வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் இருந்து தினந்தோறும் பால் கொள்முதல் செய்யப்பட்டு, உள்ளூர் விற்பனைக்காக சுமார் 60 ஆயிரம் லிட்டரும், பால் உப பொருட்கள் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கரோனா பெருந்தொற்று காரணமாக, மே 10-ம் தேதி (இன்று) முதல் 24-ம் தேதி வரை மாநிலம் முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொது முடக்கக் காலத்தில், ஆவின் பால் மற்றும் பால் உப பொருட்கள் தடையின்றி கிடைக்க ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்துக்கு பால் விற்பனை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் விவரம்:

வேலூர் பகுதிக்கு - பி.விஜயரங்கன் 94883-03158, காட்பாடி பகுதிக்கு டி.ஜெயபிரகாஷ் 82481-26101, ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு ஜி.நாகராஜன் 94863-36101, ஆம்பூர் மற்றும் குடியாத்தம் பகுதிக்கு ஜெ.வினுடேவிட் 73589-31929, திருப்பத்தூர் மாவட்டத்துக்கு ஏ.சச்சிதானந்தம் 90034-71661 என, 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, பொதுமக்கள் அந்தந்த பகுதிகளுக்கு ஆவின் பால் விநியோகம், பால் உப பொருட்கள் விநியோகம் சரிவர கிடைக்கவில்லை என்றால், மேற்கண்ட பால் விற்பனை அலுவலர்களை தொடர்புகொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம்".

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT