தமிழகம்

கோயம்பேடு சந்தை இன்று இயங்காது: வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

கோயம்பேடு சந்தை இன்று இயங்காது என வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக கோயம்பேடு மலர், காய், கனி வியாபாரிகள் நலச்சங்கத் தலைவர் எம்.தியாகராஜன் கூறியதாவது:

கரோனா தடுப்பு நடவடிக்கையாகசென்னை கோயம்பேடு சந்தைக்குவாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைவிடுமுறை விடப்படுகிறது. இந்நிலையில், மே 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை (இன்று) அனைத்து கடைகளும்இயங்கலாம் என அரசு அறிவித்துள்ளது. விடுமுறை நாளில் சந்தையைதிறப்பதாக இருந்தால், விவசாயிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தயாராக இருந்து காய்கறிகளை பறித்து அனுப்புவார்கள். அவர்கள் தயாராக இல்லாத நிலையில் இங்கு சந்தையை திறந்தால் வரத்து குறைந்து, விலை உயர்ந்துவிடும். ஒரே இடத்தில் அதிக அளவில் வியாபாரிகள் குவிவார்கள். சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாது.

அரசு விதித்து வரும் அனைத்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கும் சந்தை வியாபாரிகள் அனைவரும்கட்டுப்பட்டே செயல்பட்டு வருகிறோம். 9-ம் தேதி காய்கறிகளை வரவழைக்க இயலாததால், விடுமுறை விட முடிவெடுத்துள்ளோம். திங்கள்கிழமை வழக்கம்போல விற்பனை நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT