மதுரையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனையைத் தொடக்கிவைத்த ஆட்சியர் அன்பழகன்| படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி. 
தமிழகம்

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை தொடக்கம்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று முதல் ரெம்டெசிவர் மருந்து விற்பனை தொடங்கியுள்ளது.

ஒரு நோயாளிக்கு 6 மருந்துகள் வழங்கப்படுகிறது. ஒரு மருந்தின் விலை ரூ.1,568. மொத்தம் ரூ. 9408 கட்டணமாக செலுத்த வேண்டும்.

மருந்து வாங்க வருவோர், கீழ்கண்ட தேவையான சான்றுகளை எடுத்து வர வேண்டும்.

மருந்து விற்பனைக்கு வந்த நிலையில், இன்று முதல் நாள் பெரியளவிற்கு இந்த மருந்து வாங்க கூட்டமில்லை. ஏனெனில், இந்த மருந்து விற்பனை பற்றிய தகவல் கரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்குத் தெரியவில்லை.

ரெம்டெசிவிர் வாங்க எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்கள் வருமாறு;

1) கரோனா உறுதி செய்த ஆர்டி பிசிஆர் (RTPCR) அறிக்கை.

2) நுரையீரல் சிடி ஸ்கேன் அறிக்கை (அசல்)

3) மருத்துவரின் பரிந்துரை கடிதம் முத்திரையுடன் (அசல்)

4) தொற்றாளரின் ஆதார் அட்டை (நகல்)

5) மருந்து வாங்க வரும் நபரின் ஆதார் அட்டை ( நகல்)

மதுரை தவிர தற்போது கோயமுத்தூர், சேலம் மாவட்டங்களிலும் ரெம்டெசிவர் மருந்து விற்பனை தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT