அதிமுக ஆட்சியைத் தொடர்ந்து, திமுக ஆட்சியிலும் நிதித்துறை அமைச்சர் பொறுப்பு தென் மாவட்டத்தைச் சேர்ந்தவருக்கே வழங்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்றுக் கொண் டார். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான 34 பேர் கொண்ட அமைச்சரவைப் பட்டியலில் சென்னை, திருச்சி, மதுரை, திண்டுக்கல், விருது நகர், தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்களில் தலா இரு வருக்கு அமைச்சர் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டத்தில் மட்டும் 8 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். தமிழக அமைச்சரவையில் முதல்வருக்கு அடுத்து முக்கியத்துவம் வாய்ந்தது நிதித்துறை. மதுரை மத்திய தொகுதியில் வெற்றிபெற்ற பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் தேனியைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வமே பலமுறை நிதி அமைச்சராக இருந் துள்ளார். துணை முதல்வராக இருந்தபோதிலும் நிதித்துறையும் அவர் வசமே இருந்தது. அந்த வகையில் திமுக ஆட்சியிலும் தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கே நிதியமைச்சர் பதவி வழங்கப்பட்டு இருப்பதை தென் மாவட்ட திமுகவினர் வரவேற்கின்றனர்.
நிதியைத் தொடர்ந்து வருவாய், தொழில் துறை, ஊரக வளர்ச்சி, போக்குவரத்து, உணவு, பத்திரப் பதிவு, கூட்டுறவுத்துறை போன்ற பிற முக்கியத் துறைகளும் தென் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கே ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் தென் மாவட்டங்கள் வளர்ச்சிபெற, இவர்கள் பாடுபட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.