திருவள்ளூர் மாவட்டத்தில் மது விலக்கு குற்றம் குறித்த தகவலை தெரிவிக்க, ‘10581’ என்ற கட்டண மில்லா தொலைபேசி எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ள லாம் என மாவட்ட காவல் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட காவல்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றங்கள் நடக் காமல் தடுக்க சிறப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு பொதுமக்களின் பங்களிப் பும் இருந்தால்தான் முழு அளவில் மதுவிலக்கை அமலாக்க முடியும்.
மதுவிலக்கு குற்றம் பற்றிய தகவல்களை உள்ளூர் காவல் நிலையம், மதுவிலக்கு அமல் பிரிவு, மாவட்ட தலைமையி டம் ஆகியவற்றின் தொலைபேசி களில் தகவல் அளிக்கும் வசதி ஏற்கெனவே ஏற்படுத்தப் பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது, மதுவிலக்கு குற்றம் தொடர்பாக பொதுமக்கள் தகவல் அளிப்பதற்கான வசதி மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, ‘10581’ என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநில காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் இயங்கி வரும் மதுவிலக்கு தலைமையிடத்தில் இந்த கட்டணமில்லா தொலைபேசி செயல்பட்டு வருகிறது. இந்த தொலைபேசி எண் வழியாக தகவல்கள் அளிக்கப்பட்டால், உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க இயலும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.