கரூரில் கள்ள நோட்டுகளைப் புழக் கத்தில் விட்ட 6 பேரை போலீஸார் கைது செய்து, ரூ.6.50 லட்சம் மதிப்பிலான போலி நோட்டுகளைப் பறிமுதல் செய்தனர்.
கரூரில் சிலர் கள்ள நோட்டு களை மாற்றுவதாக பசுபதிபாளை யம் போலீஸுக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அங்கு சென்ற போலீ ஸார், சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த ஏமூர் நடுப்பாளையம் இளையராஜா(33), கரூர் வடிவேல் நகர் ராஜேந்திரன்(50), வெங்கமேடு விவிஜி நகர் திருமூர்த்தி(34) ஆகியோரைப் பிடித்து, விசாரணை நடத்தினர்.
இளையராஜா வீட்டில், கலர் ஜெராக்ஸ் இயந்திரம் மூலம் 500 ரூபாய் நோட்டுகளைத் தயாரித்து, அவற்றைப் புழக்கத்தில் விட்டது தெரியவந்தது. அங்கிருந்த ரூ.6.50 லட்சம் மதிப்பிலான, 500 ரூபாய் போலி நோட்டுகள், ஜெராக்ஸ் இயந் திரம், பிரின்டர் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர்.
இளையராஜா, ராஜேந்திரன், திருமூர்த்தியுடன், பரமசிவம்(35), திருமாநிலையூர் சரவணன்(45), திருச்சி உறையூர் நாச்சியார் பாளை யம் வெங்கடேஷ்(68) ஆகியோரை யும் நேற்று கைது செய்தனர்.