திருப்பூர் யுனிவர்சல் திரையரங்கப்பகுதியில் உள்ள தற்காலிகப்பேருந்து நிலையத்தால், நிரந்தரகுப்பைத் தொட்டியாக மாறும்நொய்யலாறு என்ற தலைப்பில்,‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் நேற்றுசெய்தி வெளியானது. இதன்எதிரொலியாக, நேற்று காலை மாநகராட்சி ஆணையர் உத்தரவுப்படி, உதவி ஆணையர் சுப்பிரமணியம் மேற்பார்வையில், தூய்மைப்பணியாளர்கள், நொய்யலாற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது ‘‘நொய்யலாற்றில் கிடந்த குப்பையை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நொய்யல் ஆற்றங்கரையில் பக்கவாட்டு சுவர் இல்லை.
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் நொய்யல் ஆற்றங்கரை சீரமைக்கப்பட உள்ளதால், அதில் பக்கவாட்டுச் சுவர் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது பேருந்து நிலையத்துக்கு வரும் பொதுமக்கள், நொய்ய லாற்றில் குப்பை போடாதவாறு, தற்காலிகப் பேருந்து நிலையத் துக்குள் ஆங்காங்கே குப்பைத் தொட்டிகளை வைக்க உள்ளோம்’’ என்றனர்.