தமிழகம்

மாவோயிஸ்ட் நடமாட்டத்தைக் கண்காணிக்க தமிழக - கர்நாடக மாநில எல்லை சோதனைச் சாவடிகளில் கேமராக்கள்

செய்திப்பிரிவு

மாவோயிஸ்ட் நடமாட்டத்தை கண்காணிக்க கேரள, கர்நாடக மாநிலங்களின் எல்லையில், நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட சோதனைச் சாவடிகளில் அதிநவீன கண்காணிப்புக் கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.

கேரள, கர்நாடக மாநிலங் களின் எல்லைப் பகுதியில் நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட கூடலூர், பந்தலூர் பகுதிகள் அமைந்துள் ளன. தமிழக எல்லைப் பகுதிகளில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் உள்ளதாக அவ்வப்போது கிடைக் கும் தகவல்களையடுத்து காவல் துறையினரும், அதிரடிப்படையின ரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் அமைதிப் பள்ளத் தாக்குப் பகுதியில் மாவோயிஸ்ட் கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, நீலகிரி மாவட்டம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. வனப் பகுதிகளை ஒட்டிய காவல் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மஞ்சூர் அருகே கேரள மாநில எல்லையில் முள்ளி, மேல் பவானி, கெத்தை, கிண்ணக்கொரை ஆகிய பகுதிகளில் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா தலைமையில் போலீ ஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், மர்ம நபர்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்க நீலகிரி மாவட்ட எல்லையிலுள்ள தாளூர், பாட்டவயல், சோலாடி, நம்பியார்குன்னு, அய்யன் கொல்லி, நாடுகாணி, கக்கநல்லா உள்ளிட்ட 8 சோதனைச் சாவடி களில், ரூ.10 லட்சம் செலவில் நவீன கேமராக்கள் மற்றும் அதிக ஒளியுடைய விளக்குகள் நிறுவப்பட்டுள்ளன. கேமராக்களில் பதிவாகும் காட்சிகள், மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பதிவாகும் வகையில் நிறுவப்பட்டுள்ளன.

போலீஸார் கூறும்போது, ‘கெத்தையில் நிரந்தர சோதனைச் சாவடி அமைக்க காவல்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டிடம் கட்டப்படும்’ என்றனர்.

SCROLL FOR NEXT