தமிழகம்

அகர்வால் கண் மருத்துவமனை 58-வது ஆண்டு விழா: சென்னையில் புதிய கருவிழி மாற்று சிகிச்சை மாநாடு

செய்திப்பிரிவு

டாக்டர் அகர்வால் கண் மருத்துவ மனையின் 58-வது ஆண்டு விழா கொண்டாட்டம் மற்றும் பீடெக் - ப்ரீ டெசமென்ட் எண்டோதீலியல் கொரட்டோபிளாஸ்டி (புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிழி மாற்று சிகிச்சை) மாநாடு சென்னை கிண்டி ஐடிசி சோழா ஓட்டலில் நேற்று நடந்தது.

டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் அமர் அகர்வால் தலைமை தாங்கி னார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ராஜன் கண் மருத்துவ மனையின் தலைவர் டாக்டர் மோகன் ராஜன் விழா மற்றும் மாநாட்டை தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் இருந்து 300-க்கும் மேற்பட்ட கண் சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்றனர்.

இந்த விழா மற்றும் மாநாடு பற்றி டாக்டர் அமர் அகர்வால், டாக்டர் மோகன் ராஜன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை கடந்த 1957-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரு முழுமையான கண் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கிறது டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை. தமிழகம், தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா மற்றும் வெளிநாடுகளில் மொத்தம் 60 மருத்துவமனைகள் இருக்கின்றன. 2020-ம் ஆண்டுக்குள் 200 மருத்துவ மனைகளாக உருவாக்க வேண்டும் என்பதே இலக்கு. முன்பெல்லாம் பார்வையற்றவருக்கு கருவிழி மாற்று அறுவைச் சிகிச்சை என்பது தானம் பெறப்பட்ட கண்ணில் கருவிழியை முழுவதுமாக வைக்கப்படும். இது 60 சதவீதம் அளவுக்குதான் வெற்றியை கொடுக்கும். பீடெக் என்ற புதிய தொழில்நுட்பத்திலான கருவிழி சிகிச்சை (டாக்டர் அமர் அகர்வால் கண்டுபிடிப்பு) என்பது 90 சதவீதத்துக்கு மேல் வெற்றியை கொடுக்கிறது.

கருவிழியில் 6 அடுக்குள் உள்ளன. எந்த அடுக்கில் பிரச்சினை இருக்கிறது என்பது முதலில் கண்டுபிடிக்கப்படும். அதன்பின் தானமாக கிடைத்த கருவிழியில் இருந்து தேவையான அடுக்கை மட்டும் எடுத்து பாதிக்கப்பட்டவரின் கருவிழியில் வைக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர்.

SCROLL FOR NEXT