தமிழகம்

மதிமுக நிர்வாகிகளுடன் வைகோ ஆலோசனை

செய்திப்பிரிவு

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னி யாகுமரி மாவட்ட நிர்வாகிகளுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று ஆலோசனை மேற்கொள் கிறார்.

மாவட்ட மதிமுக செயலாளர் களாக இருந்து திருநெல்வேலி மாநகர் பெருமாள், புறநகர் சரவ ணன், தூத்துக்குடி ஜோயல், கன்னியாகுமரி தில்லைசெல்வம் ஆகியோர் அக்கட்சியிலிருந்து விலகி, திமுகவில் இணைந்துள் ளனர்.

இந்நிலையில் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் எதிரி லுள்ள லாரா பாரடைஸ் ஹோட்டல் அரங்கில், திருநெல்வேலி புறநகர், மாநகர், தூத்துக்குடி மற்றும் கன்னி யாகுமரி மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை இன்று காலை 10 மணி முதல் மாலை வரையில் வைகோ சந்தித்து உரையாடுகிறார்.

மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி, துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, ஆட்சிமன்றக் குழுச் செய லாளர் அ.கணேசமூர்த்தி, அரசி யல் ஆலோசனைக்குழுச் செயலா ளர் செவந்தியப்பன், உயர்நிலைக் குழு உறுப்பினர் ஆர்.எம்.சண்முகசுந்தரம் ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

விரைவில் இக்கட்சியில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப் படவுள்ளதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.

SCROLL FOR NEXT