தமிழகம்

ஆன்லைன் கேம்: ரூ.12 லட்சம் திருடிய சிறுவன்

செய்திப்பிரிவு

அண்ணா நகரைச் சேர்ந்த தொழிலதிபர் நேற்று முன்தினம் நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், "எனது வீட்டில் ரூ.12 லட்சத்தை யாரோ திருடி விட்டனர்" என்று குறிப் பிட்டிருந்தார்.

போலீஸார் விசாரணை நடத்தியதில், தொழிலதிபரின் 8-ம் வகுப்பு படிக்கும், 14 வயது மகன், கொஞ்சம் கொஞ்சமாக வீட்டிலிருந்த ரூ.12 லட்சத்தை திருடியது தெரியவந்தது.

இதையடுத்து, சிறுவனிடம் போலீஸார் விசாரித்தபோது, ஆன்லைன் கேம் விளையாட சிறுவன் பணத்தை திருடியதுதெரியவந்தது. சிறுவனை போலீஸார் எச்சரித்து, விடுவித்தனர்.

SCROLL FOR NEXT