தமிழகம்

மக்களுக்கான போராட்டங்களை தொடர்வோம்: சீமான் உறுதி

செய்திப்பிரிவு

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று வெளியிட்ட அறிக்கை:

கடந்த தேர்தலில் 30 லட்சத்துக்கும் மேலான வாக்குகளைப் பெற்று, தமிழகத்தின் தனித்துவமான அரசியல் அமைப்பாக நாம் தமிழர் கட்சி மாறியுள்ளது. 2016 தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 4,58,104 வாக்குகளை (1.1 சதவீதம்) பெற்றோம். 2019 மக்களவைத் தேர்தலில் 16,45,185 வாக்குகளை (4 சதவீதம்) பெற்றோம். இந்த தேர்தலில் 30,41,974 வாக்குகளுடன், தமிழகத்தின் 3-வது பெரிய அரசியல் பேரியக்கமாக மாறியுள்ளோம்.

தொடர்ந்து மக்களுக்கான போராட்டக் களங்களிலும், துயர்துடைப்புப் பணிகளிலும் முன்பைக்காட்டிலும் பன்மடங்கு எழுச்சியுடன் நாம் தமிழர் கட்சி பணியாற்றும். மக்கள் மன்றங்களில் வலிமையாக குரல்கொடுத்து, எதிர்க்கட்சியாக நிலைபெறுவோம். புதிதாக அமையவுள்ள தமிழக அரசுக்கும், கேரளாவில் தேர்வு செய்யப்பட்டுள்ள பினராயி விஜயன், மேற்கு வங்கத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள மம்தா பானர்ஜிக்கு வாழ்த்துகள்.

இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT