தமிழகம்

சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் உள்ளிட்ட சில மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கேரளா மற்றும் அதை ஒட்டியபகுதிகளில் நிலவும் வளிமண்டலமேலடுக்கு சுழற்சியால் 4, 5-ம்தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும், 6, 7-ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டியமாவட்டங்கள், உள் மாவட்டங்கள், கன்னியாகுமரி, நெல்லை,தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைபெய்யக் கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

கடலோர மாவட்டங்களில் காற்றில் ஈரப்பதம் 90% வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலை 9 டிகிரி வரை அதிகமாக உணரப்படும். இதன் காரணமாக புழுக்கம் அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT