தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் மாற்றம் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது. அதி
காரம் மிக்க முக்கிய பதவிகளைப் பிடிக்க ஐபிஎஸ் அதிகாரிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி
யேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியாகிக்கொண்டிருந்த நேரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ஐஏஎஸ் அதிகாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அதேபோல டிஜிபிக்கள் (சட்டம் ஒழுங்கு) ஜே.கே.திரிபாதி, சைலேந்திரபாபு, ப.கந்தசாமி, முகமது ஷகில் அக்தர், சங்கர் ஜுவால், கூடுதல் டிஜிபிக்கள் எம்.ரவி, மஞ்சுநாதா, சந்தீப் ராய் ராத்தோட், ஐஜி சாரங்கன், எஸ்பி வருண்குமார், ஓய்வுபெற்ற டிஜிபி ஜாங்கிட் உள்ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகளும் அவரை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
மரியாதை நிமித்தமான சந்திப்பு
என கூறப்பட்டாலும் தங்களுக்கான பதவிகளை தக்க வைத்துக் கொள்வதோடு, முக்கிய பதவிகளை பெறும் நோக்கில் இந்த சந்திப்பு நடந்ததாக விவரம் அறிந்த போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சட்டம் - ஒழுங்கு டிஜிபி பதவிக்கான போட்டி வலுவாக
உள்ளது. ஒவ்வொரு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் சட்டம் - ஒழுங்கு டிஜிபி ஆக வேண்டும் என்பது கனவு.
தற்போது ரயில்வே டிஜிபியாக உள்ள சைலேந்திரபாபு, புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி
யுள்ளது. 1987-ம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியான இவர், கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர். பெரிய அளவில் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளாதவர். கடந்த அரசால் பல ஆண்டுகளாக முக்கிய பதவிகள் கொடுக்காமல் தள்ளி வைக்கப்பட்டவர்.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த கரன் சின்ஹா, பிஹாரைச் சேர்ந்த விஜய் குமார், ராஜஸ்தானைச் சேர்ந்த சஞ்சய் அரோரா, பிஹார் சுனில் குமார் சிங், திருநெல்வேலி கந்தசாமி உள்ளிட்டோரும் டிஜிபி பதவிக்கான போட்டியில் உள்ளனர். பணி நீட்டிப்பு செய்யப்பட்ட ஜே.கே.திரிபாதி, இந்த மாதம் இறுதியில் ஓய்வு பெறுகிறார். அதுவரை அவரே சட்டம் ஒழுங்கு டிஜிபியாக தொடர வாய்ப்பு உள்ளதாகவும், அதன்பிறகே புதிய டிஜிபி நியமனம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதேபோல சென்னை மாநகர காவல் ஆணையர் பதவிக்கு தமிழக சிறப்பு அதிரடிப்படை கூடுதல் டிஜிபியாக இருக்கும் எம்.ரவி பெயர் அடிபடுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், 1991-ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்தவர். அதிமுக அரசால் தொடர்ந்து ஓரம் கட்டப்பட்டவர். சென்னை காவல் ஆணையர் போட்டியில் முன்னாள் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், ஒடிசாவைச் சேர்ந்த அமரேஷ் புஜாரி உள்ளிட்டோரும் உள்ளனர். தற்போதைய காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வாலும் பதவியை தக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி பதவிக்கு சந்தீப்ராய் ரத்தோர் பெயரும் அடிபடுகிறது. இவர் டெல்லியைச் சேர்ந்தவர். தற்போது
உளவுத்துறை ஐஜியாக உள்ள ஈரோட்டைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தியும் மாற்றப்பட உள்ளார். ஐஜிக்களாக உள்ள கேரளாவைச் சேர்ந்த கி.சங்கர், கன்னியாகுமரியைச் சேர்ந்த அ.அமல்ராஜ், கர்நாடகாவைச் சேர்ந்த எச்.எம்.ஜெயராம் ஆகியோருக்கு கூடுதல் டிஜிபிக்களாக பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.
சில டிஐஜிகள், ஐஜிக்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். மண்டல ஐஜிக்கள், மாவட்ட எஸ்பிக்களும் கூண்டோடு மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி, உளவுத்
துறை ஐஜி, சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகிய 3 பதவிகளுக்கு முதல்கட்டமாக புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.