புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நிரவி-திருப்பட்டினம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் எம்.நாக தியாகராஜன் 5,511 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பாஜக வேட்பாளர் வி.எம்.சி.எஸ்.மனோகரன் 8,985 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இத்தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பதால் அதிருப்தியடைந்த தற்போதைய எம்.எல்.ஏவான கீதா ஆனந்தன் சுயேச்சையாக போட்டியிட்டு 1,495 வாக்குகள் பெற்று தோல்வியுற்றார்.
வாக்குகள் விவரம்:
எம்.நாக தியாகராஜன்(திமுக): 14,496
வி.எம்.சி.எஸ்.மனோகரன்(பாஜக): 8,985
கீதா ஆனந்தன் (சுயே): 1,495
அ.முகமது யூசுப்(நாம் தமிழர்): 471
ஏ.அருள் ராஜூ(தேமுதிக): 55
பால தண்டாயுதபானி(அமமுக): 45
எஸ்.செல்லமுத்து(இந்திய ஜனநாயக கட்சி): 35
நோட்டா: 186