தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் குறித்து ட்விட்டரில் தமிழில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.
அதில், “தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். மாநில நலனுக்காகவும் பெருமைமிகு தமிழ் பண்பாட்டை மென்மேலும் பறைசாற்றவும் நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம் என்று தமிழக மக்களுக்கு உறுதியளிக்கிறேன். கடினமாகஉழைத்த நமது தொண்டர்களைப் பாராட்டுகிறேன்.”
இவ்வாறு பிரதமர் தெரிவித் துள்ளார்.