தமிழகம்

வெள்ளம் பாதித்த பகுதிகளில் கொசு உற்பத்தி குறைந்துள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

செய்திப்பிரிவு

சுகாதாரத்துறை மேற்கொண்ட நட வடிக்கைகளால் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் கொசு உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கொசுக்கள், ஈக்களை ஒழிக்க கூடுதலாக புகை அடிக்கும் இயந் திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை அண்ணாசாலையில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று நடந் தது. புகை அடிக்கும் 5 பெரிய இயந்திரங்கள், கையில் எடுத்துச் செல்லும் 25 இயந்திரங்களை பணியாளர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வழங் கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் பேசிய தாவது: சென்னை, காஞ்சிபுரம், திரு வள்ளூர் மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு தொற்றுநோய் பரவாமல் இருக்க பல்வேறு நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வரு கிறது. தண்ணீரால் பரவும் நோய் கள் கட்டுக்குள் கொண்டு வரப்பட் டுள்ளன. டெங்கு, சிக்கன்குனியா நோய்கள் பரவாமல் தடுப்பதற்கு கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

மற்ற மாவட்டங்களில் இருந்து பூச்சியியல் வல்லுநர்கள் வரவழைக் கப்பட்டுள்ளனர். 2 பூச்சியியல் வல்லுநர்கள், 3 களப்பணியாளர் களைக் கொண்ட 20 விரைவு கொசு ஒழிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள் ளன. இந்தக் குழுக்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கொசுப்புழு வளரும் இடங்களை கண்டறிந்து அவற்றை அழித்து வருகிறது. பூச்சி மருந்து தெளித்தும், புகைமருந்து அடித்தும் முதிர்கொசுக்களை அழிக் கின்றனர். இந்த நடவடிக்கைகளால் வெள்ளம் பாதித்த பகுதிகளில் கொசு உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது.

பள்ளிகள், கல்லூரிகள், விடுதி கள், மருத்துவமனைகள், குடிசைப் பகுதிகள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் உட்பட வெள்ளம் பாதித்த பகுதிகளில் இக்குழுக்கள் பணியாற்றி வருகின்றன.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) எஸ்.கீதாலட்சுமி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் (டிபிஎச்) க.குழந்தைசாமி, கூடுதல் இயக்கு நர் வடிவேலன், இணை இயக்கு நர் சரவணன் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT